வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பேஸ்புக் நண்பர் கூறியதை நம்பி சென்ற பெண்... காத்திருந்த பின்விளைவு

Report Print Raju Raju in தெற்காசியா

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பேஸ்புக் நண்பர் கூறியதை கேட்டு அவருடன் சென்ற பெண் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு மீட்கப்பட்ட நிலையில் நிறைய பணம் சம்பாதிப்பதற்காக மீண்டும் வெளிநாடு செல்ல முயல்வேன் என அவர் கூறியுள்ளார்.

நேபாளத்தை சேர்ந்த பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்ட சந்தானி என்ற பெண்ணை பிபிசி பத்திரிக்கை பேட்டி எடுத்துள்ளது.

அவர் கூறுகையில், எனது சகோதரி ஒருவருடன் அடிக்கடி பேஸ்புக்கில் உரையாடிக் கொண்டிருப்பார். ஒருகட்டத்தில் அவர் எனக்கு நட்பழைப்பு கொடுக்க அதை நானும் ஏற்றுக்கொண்டுவிட்டேன்.

அதன் பிறகு நாங்கள் குறுஞ்செய்தி வழியே உரையாடிக் கொண்டிருந்தபோது, ஒருநாள் அவர் எனக்கு ஈராக்கில் வேலை வாங்கிக்கொடுப்பதாக கூறினார்.

இதுவரை நான் நேரில் பார்க்காத அவர், ஒரு நாள் விசா மற்றும் பாஸ்போர்ட்டை ஒருவரிடம் கொடுத்து அனுப்பினார்

2015ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எங்கள் குடும்பம் தங்கியிருந்த வீடு தரைமட்டமானது.

அந்த சமயத்தில் நான் முகாமில் தங்கியிருந்தேன் என கூறுகிறார்.

பின்னர் சந்தானியிடம் குறுஞ்செய்தியில் பேசிய நபர் அவரிடம் டெல்லி வழியாக ஈராக்குக்கு அழைத்து செல்லப்படுவாய் என கூறினார்

பின்னர் நேபாளத்திலிருந்து டெல்லி அழைத்து செல்லப்பட்ட சந்தானி, அங்கிருந்து ஈராக் அழைத்து செல்லப்படவில்லை.

மாறாக, அங்குள்ள ஒரு விடுதியில் மேலும் 18 பெண்களுடன் வைத்து அடைக்கப்பட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், விடுதியில் பல வாரங்களுக்கு அடைக்கப்பட்டிருந்தபோது, நான் விற்பனை செய்யப்பட போகிறேன் என்று எனக்கு தெரியும்.

பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்டேன், வாழ்க்கை முழுவதும் திருமணம் செய்து கொள்வதை தான் விரும்பவில்லை.

திருமணமான பல பெண்கள் நன்றாக வாழ்வதை போன்று எனக்கு தெரியவில்லை. ஆனால், பல ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதை காண முடிகிறது.

நான் நிறைய பணம் சம்பாதிப்பதற்காக மீண்டும் வெளிநாடு செல்ல முயற்சி செய்வேன் என்று சந்தானி கூறுகிறார் உறுதியாக!

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers