தன்னை கடித்த கொடிய விஷப்பாம்பை ஆத்திரத்தில் கடித்து சாப்பிட முயன்ற நபர்... இறுதியாக நடந்தது என்ன?

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் தன்னை கடித்த பாம்பை விவசாயி மீண்டும் கடித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் பர்வத் கலே பரியா (70).

இவர் தனது நிலத்தில் கடந்த சனிக்கிழமை விவசாயம் பார்த்து கொண்டிருந்தார். அப்போது விஷப்பாம்பு ஒன்று பர்வத்தை கடித்துள்ளது.

இதையடுத்து வலியால் துடித்த பர்வத்துக்கு பாம்பின் மீது கோபம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பாம்பை திரும்ப கடித்த அவர் அதை சாப்பிடவும் முயன்றார்.

பின்னர் அங்கு வந்த பர்வத்தின் உறவினர் பாம்பை எடுத்து கொண்டு போய் தீயில் போட்டு எரித்து கொன்றார்.

இதன்பின்னர் பர்வத்தை அருகிலிருந்தவர்கள் தூக்கி கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கிருந்து அவர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் மூன்றாவதாக வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இதனால் நான்கு மணி நேரம் சிகிச்சை கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்ட பர்வத் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers