கணவரை மதுவுக்கு அடிமையாக்கி என்னை பாலியல் வன்கொடுமை செய்தான்... எஸ்.பியிடம் கண்ணீர் விட்ட திருமணமான பெண்

Report Print Santhan in தெற்காசியா

தமிழகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் மீது கல்லூரி மாணவி கொடுத்த புகாரை தொடர்ந்து, திருமணமான பெண் ஒருவர் அவர் தன்னையும் ஐந்து முறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் ஆபாச வீடியோ எடுத்து என்னை பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவி ஒருவர் எஸ்.பியிடம் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் ராதாகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் அடங்குவதற்கு திருமணமான பெண் ஒருவர் இன்று ஈரோடு எஸ்.பியிடம், ‘என்னுடைய கணவருக்கு மது வாங்கிக் கொடுத்து அடிமையாக்கி, ராதாகிருஷ்ணன் என்னை ஐந்து முறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த கலா என்ற பெண், அளித்துள்ள புகார் மனுவில், எனக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.

என்னுடைய கணவர் குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர். அவருக்கு ஒயின்ஷாப்பில் ராதாகிருஷ்ணன் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார்.

அதன்பிறகு, தினமும் என்னுடைய கணவருக்கு அவர் மது வாங்கிக் கொடுத்து, அவரை அடிமையாக்கியிருக்கிறார். என் வீட்டுக்காரர் ஒருநாள் அந்த ராதாகிருஷ்ணனை வீட்டுக்கு அழைத்து வந்து, நண்பர் என்று அறிமுகப்படுத்தியதால், சாப்பாடு போட்டு உபசரித்து அனுப்பினேன்.

அதையடுத்து, என்னுடைய மகன் பிறந்தநாள் அன்று, என் கணவருடன் மது போதையில் மறுபடியும் என் வீட்டுக்கு வந்தார். அதன்பிறகு ராதாகிருஷ்ணன் என்ன சொன்னார் என்று தெரியவில்லை,அப்போதிலிருந்து கணவர் என்னிடம் அடிக்கடி சண்டை போட்டுவந்தார்.

ஒருகட்டத்தில், என் கணவருடைய தொல்லை தாங்காமல், நான் சாணி பவுடரைக் குடித்துச் சாகும் முயற்சியில் இறங்கினேன். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் என்னைக் காப்பாற்றி ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மருத்துவமனைக்கு வந்த இராதகிருஷ்ணன், குழந்தையைப் பாத்துக்கோ, உனக்கு நான் இருக்கேன் என்று கூறினார்.

நான் வேண்டாம் என்று கூறிய போதும், என் குழந்தையிடம் 2000 ரூபாயை கொடுத்துவிட்டு சென்றார். அதன் பின் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த பின், ஒருநாள் வீட்டுக்கு வந்த ராதாகிருஷ்ணன், என்னிடம் தவறாக நடந்தார். உன் குழந்தைகளை நான் பாத்துக்கிறேன். உன்னை ராணி மாதிரி வச்சுக்கிறேன் என்று கூறி அத்து மீறி நடந்து கொண்டார்.

இந்த கொடுமையை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்தேன். இப்போது தான் இவனைப் பற்றிய தகவல்களை செய்தி தாள்களில் படித்தேன், அதன் காரணமாகவே புகார் அளிக்க வந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...