வீட்டின் கதவை தட்டி பார்த்த கணவன்..ஜன்னலை திறந்த பார்த்த போது கதறி அழுத கோர சம்பவம்!

Report Print Santhan in தெற்காசியா

தமிழகத்தில் மனைவி மற்றும் மகனை தனியாக விட்டுவிட்டு இரவு பணிக்கு சென்று திரும்பிய கணவன் இருவரும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பெருமாள் தாங்கல் புதூர் கிராமம், பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர், வனப் பெருமாள். இவருக்கு விஜியலட்சுமி என்ற மனைவியும், போத்திராஜ் என்ற மகனும் உள்ளனர்.

வனப் பெருமாள் செக்யூரிட்டியாக வேலை பார்ப்பதால், இரவு பணிக்காக சென்றுள்ளார் அப்போது வீட்டில் மனைவி விஜியலட்சுமி மற்றும் போத்திராஜ் தனியாக இருந்துள்ளனர்.

அப்போது இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று அதிகாலையில் உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் விஜியலட்சுமியின் கழுத்தில் இருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த 26 சவரன் நகைகளை திருடியுள்ளனர்.

அதன் பின் அவர்கள் விஜியலட்சுமியின் கழுத்துப் பகுதியில் குத்தி கொலை செய்துள்ளனர். அருகில் இருந்த மகன் போத்திராஜை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய வனப் பெருமாள் வீட்டின் கதவை தட்டிப் பார்த்துள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் திறக்கப்படாத்தால், வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் பணத்திற்காகக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலைக்கான உண்மைக் காரணம் என்ன என்று பொலிசார் விசாரணை நடத்தினர்.

தேர்தல் நேரம் என்பதால், பொலிசார் ரோந்துப் பணி செல்லாமல் இருந்துள்ளனர். இதைப் பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள், அந்தப் பகுதியில் இந்த வீட்டில் நுழைந்து கொள்ளையடித்துக் கொலையும் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers