திருமணமான பெண்..... பேஸ்புக்கில் எல்லை மீறியதால் உயிர்போன சம்பவம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

சென்னை திருவல்லிக்கேனியில் திருமணமான பெண் ஒருவர் பேஸ்புக் சமூகவலைதளத்தில் எல்லைமீறி பயன்படுத்தி தேவையற்ற நட்பு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அயூப் என்பவரின் மனைவி பொழுதுபோக்கிற்காக பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். நாளடைவில் அதற்கு அடிமையானதையடுத்து ஆண் நண்பர்களுடன் அதிக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வாசிம் அக்ரம், முகமது மற்றும் பர்ஜீஸ் என்ற மூவருடன் பழகி வந்துள்ளார். நட்பு ரீதியாக பழகிய இந்த பழக்கம் நாளடைவில் புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு மாறியது.

இந்நிலையில் திடீரென குறித்த பெண் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதன்பின்னர் தான் கணவர் அயூப்பிற்கு தெரியவந்துள்ளது மனைவியின் எல்லை மீறிய பேஸ்புக் பயன்பாடுதான் இந்த உயிரிழப்பிற்கு காரணம் என்று.

இதுகுறித்து அவர் பொலிசில் புகார் அளித்துள்ளார், மேலும் அயூப் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது மனைவி அந்த 3 ஆண்களை நம்பி சென்று புகைப்படம் எடுத்துள்ளார். அவர்கள் எனது மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளனர்.

புகைப்படங்களை காண்பித்து எனது மனைவியிடம் தொடர்ந்து பணம் பறித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவள் தற்கொலை செய்துகொண்டாள் என கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் அந்த மூவரின் விபரங்களையும் சேகரித்து காவல்துறை வழக்கை விசாரித்து வருகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers