கிளம்பிய சிறிது நேரத்தில் செங்குத்தாக கீழே விழுந்து நொறுங்கிய விமானம்: வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் போர் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக இன்று காலை எம்.ஐ.ஜி.27 ரகப் போர் விமானம் புறப்பட்டு சென்றது.

கிளம்பிய சிறிது நேரத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் செங்குத்தாக கீழ்நோக்கி பாய்ந்து சிரோஹி மாவட்டத்தில் உள்ள கோடானா கிராமத்தில் ஒரு வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.

போர் விமானம் தரையில் மோதுவதற்குள் அதில் இருந்த விமானி பாரசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினார்.

இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...