வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த கோடீஸ்வரர் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்.... பிரபல நடிகர் சிக்கினார்! பகீர் பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா

அமெரிக்காவிலிருந்து சொந்த ஊரான ஆந்திராவுக்கு திரும்பிய கோடீஸ்வரர் கொலை செய்யப்பட்ட வழக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

ஆந்திராவை சேர்ந்தவர் ஜெயராம் சிக்ருபதி (55) இவர் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு தலைவராக இருந்தார்.

இவர் ஆந்திராவில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் தலைவராக செயல்பட்டார்.

இவர் கடந்த ஜனவரியின் கடைசி வாரத்தில் சொந்த ஊருக்கு வந்தார்.

இதையடுத்து விஜயவாடா நெடுஞ்சாலையில் ஜெயராமன் தனது காரில் ரத்த வெள்ளத்தில் ஜனவரி 31ஆம் திகதி சடலமாக கிடந்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கார் உள்ளே இருந்த அவர் சடலத்தையும், மது பாட்டில்களையும் கைப்பற்றினார்கள்.

இது குறித்து பொலிசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வந்தார்கள்.

முதலில் ஷிகா சவுத்ரி என்ற உறவுக்கார பெண்ணுடன் ஜெயராமுக்கு தொடர்பு இருந்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து ஷிகா தனது காதலர் ராகேஷுடன் சேர்ந்து ஜெயராமை கொன்றதாக கூறப்பட்டது.

இதற்கேற்றார் போல ஜெயராமின் மனைவி பத்மஸ்ரீ, தனது கணவர் கொலை குறித்து ஷிகாவிடம் விசாரிக்க வேண்டும், ஜெயராம் கொல்லப்பட்ட பின்னர் ஷிகா என் வீட்டுக்கு வந்தார். பின்னர் தான் முக்கியமான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் காணாமல் போனதாக புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஷிகாவுக்கு இந்த கொலைக்கும் சம்மந்தமில்லை என பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர்.

மேலும், ராகேஷ் ரெட்டி தான் இந்த கொலையின் முக்கிய குற்றவாளி எனவும், பிரபல கொமடி நடிகர் சூர்ய பிரசாத் மற்றும் கிஷோர் என்பவருடன் சேர்ந்து ஜெயராமை அவர் தான் கொலை செய்தார் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

கோடீஸ்வரரான ஜெயராமிடம் உள்ள பணத்தை பறிக்கவே இவ்வாறு செய்துள்ளனர்.

இதையடுத்து ராகேஷ், சூர்ய பிரசாத் மற்றும் கிஷோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers