திட்டமிட்டே மனைவி, பிள்ளைகளை உயிருடன் கொளுத்தினாரா கணவர்? திடுக்கிடும் திருப்பம்

Report Print Fathima Fathima in தெற்காசியா

இந்தியாவின் டெல்லியில் நேற்று முன்தினம் மாலை கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த விபத்தில் இளம்பெண் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் உடல் முழுவதும் கருகி உயிரிழந்தனர்.

டெல்லியை சேர்ந்தவர் உபேந்திரா மிஷ்ரா, இவரது மனைவி ரஞ்சனா, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் போது கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் ரஞ்சனா மற்றும் நிக்கி, ரிதி என இரு குழந்தைகளும் உடல் கருகி பலியாகினர்.

விபத்தின் போது முன் இருக்கையில் இருந்த ஒரு பிள்ளையை மட்டும் உபேந்திரா காப்பாற்றினார், மற்றவர்களை காப்பாற்றும் முன் தன் கண் முன்னே அனைவரும் பலியானதாக கதறி துடித்தார் உபேந்திரா.

ஆனால் இது உண்மையல்ல, திட்டமிட்ட படுகொலை, இதுபற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் ரஞ்சனாவின் உறவினர்கள்.

இதற்கு காரணம் இருவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும், தற்போது தான் முதன்முறையாக மனைவியை வெளியே அழைத்து சென்றாராம்.

முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததில் இருந்தே, தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என ரஞ்சனா உபேந்திரா அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே காரில் கேஸ் சிலிண்டரை வேண்டுமென்றே திறந்துவிட்டு உபேந்திராவை விபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என கூறும் உறவினர்கள், இதுதொடர்பில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பொலிசாரை கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால் இதை மறுத்துள்ள உபேந்திரா, என் மனைவி மற்றும் பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளேன், அவர்களை நான் ஏன் கொல்ல வேண்டும்.

காரில் தீப்பிடித்தது விபத்தே, அவர்களை காப்பாற்ற நான் முயன்றும் இயலாமல் போனது, இந்த விபத்தில் எனக்கும் காயம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கார் தடயவியல் சோதனைக்கு பிறகே விரிவான விசாரணை தொடரும் என டிஜிபி தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers