பெண்ணை நிர்வாணப்படுத்தி பிளேடால் கிழித்து டார்ச்சர் செய்த இளைஞன்! பொலிசார் சொன்ன அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in தெற்காசியா
123Shares

இந்தியாவில் 18 வயதிற்கும் குறைவான பெண்ணை தனியாக அழைத்துச் சென்ற இளைஞன் அவரை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞன், தன்னுடன் 18 வயதிற்கும் குறைவான பெண்ணை ஆள்நடமாட்டம் இருக்காத Tankbund பகுதியின் காந்திநகர் அருகே இருக்கும் DBR மில் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அந்த இளைஞன் அந்த பெண்ணிடம் மிகவும் மோசமாக நடந்துள்ளான். இதனால் அந்த பெண் நிர்வாண நிலையில் அருகில் இருந்த நபர்களால் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், நேற்று நடந்த இந்த சம்பவத்தின் போது குறித்த இளைஞன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தான். அவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறான்.

குறித்த பெண்ணை அப்பகுதிக்கு அழைத்துச் சென்று, உடையை கழற்றும் படி துன்புறுத்தியுள்ளான். ஆனால் மறுத்ததால், தன்னிடம் இருந்த பிளேடால் சிறுமியின் உடையை கிழித்து நிர்வாணமாக்கியுள்ளான்.

அதன் பின் சிறுமியின் உடலிலும் பிளேடால் கிழித்துள்ளான். இதனால் அந்த பெண் பயத்தில் கத்தியதால், அந்த சத்ததைக் கேட்ட அருகில் இருந்த மக்கள் உடனடியாக அவனிடமிருந்து காப்பாற்றியுள்ளனர்.

அதன் பின் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததால், அந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறியுள்ளனர்.

அவனை கைது செய்த பொலிசார், அவன் மீது கடத்தல் மற்றும் சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்