மாமா வீட்டுக்கு போனவன் திரும்பவே இல்லைங்க..2 பேரை பலி கொண்ட 12-வயது சிறுவனைப் பற்றி தாய் கண்ணீர்

Report Print Santhan in தெற்காசியா
92Shares

ஜம்முகாஷ்மீர் பேருந்து நிலையத்தில் நடந்த தாக்குதலுக்கு 12 வயது சிறுவன் தான் காரணம் எனவும், அவன் தீவிர்வாதிகளால் மூளை சலவை செய்யப்பட்டு இந்த செயலை செய்திருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் நேற்று முன் தினம் ஜம்மு-வில் இருந்து டெல்லி செல்லும் பேருந்தில் சக்தி வாய்ந்த வெடி குண்டு வெடித்தது.

இதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத ஒருவர் கையெறி குண்டைப் பேருந்துக்கு அடியில் வீசிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

பிறகு, சிசிடிவி கேமிரா மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உதவியுடன் நாக் ரோடா சுங்கச்சாவடியில் வைத்து இந்த சம்பவத்திற்கு காரணமான நபரை கைது செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்து சில அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன்தான் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளான் எனவும் அவனது பள்ளியில் இருந்த பிறந்தநாள் சான்றிதழ் கைப்பற்றிய போது, அதில் 10-03-2006 என அவனின் பிறந்தநாள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சிறுவன் 9-ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறான். இவன் தான் அவர்கள் குடும்பத்தில் மூத்த மகன் எனவும் அவனது தந்தை பெயின்ட்டராக வேலைசெய்துவருகிறார் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பேருந்து நிலையத்தில் குண்டு வீசியவர் ஒரு சாதாரண இளைஞன்.

கூலிப்படையினால் மூளைச்சலவை செய்யப்பட்டு, அவர் இவ்வாறு செய்திருக்கலாம். அவர் பின்னால் உள்ள அமைப்பைக் கண்டறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் சிறுவனின் தாயோ அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில், கடந்த செவ்வாய்க் கிழமை பிற்பகல், தனது தாய் மாமன் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டான்.

அதன் பின் அன்றைய தினம் இரவு, உறவினர் வீட்டில் தங்கிவிட்டு, மறுநாள் புதன்கிழமை வீட்டிற்கு வருவதாக கூறிவிட்டு சென்றான்.

ஆனால், இங்கு வரவே இல்லை. அவன், ஜம்மு சென்றுள்ளான் என எங்களுக்குத் தெரியாது. பிறகு, வியாழக்கிழமை காலை எனக்கு போன் செய்து, ஜம்முவில் உள்ள உறவினர் போன் நம்பரைக் கேட்டுத் தெரிந்துகொண்ட சில மணி நேரங்களுக்கு பின்னரே அவன் கைது செய்யப்பட்டுள்ளான் என்ற தகவல் தெரியவந்தது.

அவன் மிகவும் அப்பாவி. இது போன்ற செயல்களை நிச்சயம் செய்திருக்க மாட்டான். அவனது பின்புலங்களைச் சோதனைசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்