எல்லையில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Report Print Balamanuvelan in தெற்காசியா

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா மற்றும் சுந்தர்பானி பகுதிகளில் இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது.

இன்று மட்டும் ஆறாவது முறையாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை சரியாக 10.30 மணிக்கு அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம், சிறிய ரக ராக்கெட் வெடிகுண்டுகளை இந்த தாக்குதலின்போது பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்முவில் இருந்து சரியாக 159 கிலோமீற்றர் தொலைவில் இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது.

இதனால் அந்த பகுதியைச் சுற்றி 5 கிலோ மீட்டர் அளவுக்கு உள்ள பள்ளிகள் அனைத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் எல்லையோர கிராம மக்களிடையே அச்சத்தை எற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தின் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்