நம்ப முடியவில்லை.. இறந்தவர்களின் உடலை காட்டுங்கள்! நாட்டிற்காக மகனை இழந்த தாய் கண்ணீர்

Report Print Santhan in தெற்காசியா

இந்தியா தாக்குதல் நடத்தியிருந்தால், இறந்த பயங்கரவாதிகளின் உடலை காட்டுங்கள் என்று உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் கடந்த 14-ஆம் திகதி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 துணை இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவத்தினர் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாமில் நடத்திய தாக்குதலில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இறந்த தீவிரவாதிகளின் புகைப்படங்களோ, வீடியோக்களோ வெளியாகததால், இது தொடர்ந்து சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இறந்த பயங்கரவாதிகளின் சடலத்தை எங்களிடம் காட்டுங்கள் என புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பம் வலியுறித்தியுள்ளனர்.

இறந்த 40 துணை இராணுவ வீரர்களில் இரண்டு பேர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரதீப் குமார் மற்றும் ராம் வாகீல் ஆவர்.

இவர்களின் குடும்பத்தினர் தாக்குலில் உயிரிழந்த தீவிரவாதிகள் தொடர்பாக ஆதாரம் கேட்பதாக கூறப்படுகிறது.

ராம் வாகீலின் சகோதரி ராம் ராக்‌ஷா இது குறித்து கூறுகையில், புல்வாமாவில் தாக்குதல் நடத்தப்பட்டதும் யாரோ உடனடியாக பொறுப்பு ஏற்கிறார்.

இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது என்பதில் தெளிவாக உள்ளேன். ஆனால் எங்கு நடந்தது தெளிவான ஆதாரமாக இருக்க வேண்டும்.

பாகிஸ்தான் எந்த சேதமும் இல்லை என்று கூறுகிறது. எனவே, ஆதாரம் இல்லாவிட்டால் எப்படி ஏற்றுக்கொள்ள என் சகோதரனின் படுகொலைக்கு பழிவாங்கப்பட்டது என்று தெரிந்தால்தான் அமைதியடைவோம் என்று கூறியுள்ளார்.

பிரதீப் குமாரின் தாய் சுலேலதாவும், எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. எதிரிதரப்பில் யாரும் இறந்ததாக எங்களுக்கு தெரியவில்லை. மறுபுறம் இறந்த உடல்கள் கிடையாது.

உண்மையில் உறுதிசெய்யப்பட்ட செய்தி கிடையாது. நாங்கள் தொலைக்காட்சிகளில்தான் செய்தியை பார்க்கிறோம். பதிலடி தொடர்பாக எங்களுடைய வீட்டில் தெரிவிக்க வேண்டும். பயங்கரவாதிகளின் உயிரிழந்த சடங்களை பார்க்க வேண்டும் என்று மகனை இழந்த தாய் கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்