பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தான் பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Balamanuvelan in தெற்காசியா

இந்தியாவுக்குக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழல் முடிவுக்கு வராத நிலையில், இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தங்கள் எல்லைக்குள் நுழைந்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

சில புகைப்படங்களை ஆதாரமாகக் காட்டி பாகிஸ்தானின் கடற்படை தங்கள் கடல் எல்லைப்பகுதியில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நுழைந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

அரபிக் கடலில், தங்கள் எல்லைக்குள் அந்த நீர்மூழ்கிக் கப்பல் நுழையாமல் தடுத்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

அந்த வீடியோ போலியானது என்று கூறி இந்தியா பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

கடந்த பல நாட்களாகவே பாகிஸ்தான் தவறான செய்திகளை பரப்பி வருவதை கவனித்து வருகிறோம் என இந்திய கடற்படையின் செய்தி தொடர்பாளர் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு அளிக்கப்பட்ட பேட்டி ஒன்றில், அந்த வீடியோ போலியானது எனவும், அப்படி தங்கள் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைய முயன்றால் அது கடல் மட்டத்திலிருந்து மேலே ஏன் வரப்போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது இந்திய தரப்பு.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்