மகன்கள் கண்முன்னே தமிழ்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு... செய்வதறியாது நடுங்கிய துயரம்: சிக்கிய கடிதம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

மும்பை மாநிலத்தில் வசித்து வந்த தமிழ்பெண் ஒருவர் தனது இரண்டு மகன்கள் கண்முன்னே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவர் மும்பையில் வசித்து வந்துள்ளார்.

ஜெயந்தி தாராவியில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டு வந்த ஜெயந்தி தனது மகன்களுக்காக வாங்கிவந்த நோட்டு மற்றும் பேனாவை கொடுத்துவிட்டு மேல்தளத்துக்கு சென்று தூக்குபோட்டுள்ளார்.

தாயின் அலறல் சத்தம்கேட்டு வேகமாக ஓடிச்சென்று பார்த்த மகன்கள், தங்களது தாய் தூக்கில் அரை உயிராக தொங்கிகொண்டிருப்பதை பார்த்து எதுவும் செய்ய முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுள்ளனர்.

அதன்பின்னர் தாய் இறந்துவிடவே இருவரும் அழுதுகொண்டிருந்துள்ளனர், வீட்டிற்கு வந்த தந்தை, மகன்கள் அழுவதை பார்த்து வேகமாக உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மனைவி தூக்கில் தொங்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மேலும், எனது இறப்பிற்கு யாரும் காரணமில்லை என ஜெயந்தி கடிதம் எழுதிவைத்திருந்துள்ளார்.

சம்பவம் குறித்து தாராவி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்