இந்திய விமானப்படைக்கு ஆதரவு தெரிவித்த பிரியங்கா சோப்ரா.. நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்க கோரி பாகிஸ்தான் மனு!

Report Print Kabilan in தெற்காசியா

இந்திய விமானப்படைக்கு ஆதரவு தெரிவித்ததால், யுனிசெப் நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் இருந்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை சரமாரியாக குண்டுகளை வீசின.

இதனைத் தொடர்ந்து, இந்திய விமானப்படைக்கு இந்திய பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகை பிரியங்கா சோப்ராவும் ‘ஜெய்ஹிந்த்’ என்று கூறி தனது வாழ்த்தினை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், யுனிசெப்பின் (UNICEF) நல்லெண்ண தூதராக இருக்கும் பிரியங்கா சோப்ரா, இந்திய ஆயுதப்படைக்கு ஆதரவளித்திருப்பதால், அவர் இந்தப் பதவியை வகிக்கக் கூடாது என்று சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து பிரியங்கா சோப்ராவுக்கு கடுமையான விமர்சனங்கள் கிளம்பின.

இதனை தொடர்ந்து, நடுநிலை வகிக்க வேண்டிய பிரியங்கா சோப்ரா இந்திய ஆயுதப்படைகளுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம், அவர் அந்தப் பதவியில் வகிக்க தகுதியில்லாதவர் ஆகிவிட்டார்.

எனவே உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் இருந்து ஒன்லைன் மூலமாக யுனிசெப்-புக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் சுமார் 2,200 பேர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரியங்கா சோப்ராவின் தந்தை அசோக் சோப்ராவும், தாய் மது சோப்ராவும் இந்திய ராணுவத்தில் மருத்துவர்களாகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்