இந்தியாவின் இன்றைய பதிலடியில் கொல்லப்பட்ட தீவிரவாதி மசூத் அசாரின் வலது கை…

Report Print Abisha in தெற்காசியா

இந்தியவிமானப்படையால் இன்று கொல்லப்பட்டஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதி யூசுப்அசார், உலகின் மிக முக்கிய தாக்குதல்களில் தொடர்புடைய ஒருவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த பிப்ரவரி14ஆம் திகதி புல்வாமா தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எம் வீரர்கள் பலியாகினர்.இதனை எதிர்த்து ஏற்கனவே தாக்குதல் நடத்திய நிலையில். இன்று காலை அதிரடி தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியது.

இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமதுஅமைப்பின் முக்கியமான தீவிரவாதிகளில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர். பாகிஸ்தான் தரப்பிலும் இது பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.

இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமதுஅமைப்பின் தலைவன் மசூத் அசாரின் மைத்துனன் யூசுப் அசார் கொல்லப்பட்டுள்ளான். பாலகோட் பயங்கரவாதிகள் முகாமில் போடப்பட்ட குண்டில் யூசுப் அசார் கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த தாக்குதலில் இதேபோல்200 -300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜெய்ஷ்இ முகமது அமைப்பின்தலைவன் மசூத் அசாரின் உறவினர்கள்கள் மற்றும் அமைப்பின் முக்கிய புள்ளிகளை இந்தியா, கடந்த சிலவருடங்களாக குறி வைத்து கொன்றுவருகிறது. இதற்கு முன்னதாக, 2017ல் அசாரின் மருமகன் தால்ஹா ரஷீத் கொல்லப்பட்டார். அதேபோல் 2018ல் மசூத்தின் இன்னொரு உறவினரான உஸ்மான் கொல்லப்பட்டார். இடையில் அவனுக்கு தூரத்து உறவினர்கள் பலர் கொல்லப்பட்டனர். தற்போது யூசுப் கொல்லப்பட்டு உள்ளார்.

யூசுப்அசார் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தீவிர தன்மையை பார்த்து, அந்த அமைப்பில் எல்லோரும் ''உஸ்தாத் காரி'' என்று அவர்கள் மொழியில் அழைபார்களாம். மசூத் அசாரை அடுத்தது அந்த அமைப்பில் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

யூசுப் தனது கட்டுபாட்டுக்குள் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் நான்கு முகாம்களைநடத்தி வந்துள்ளான். தற்போது தாக்குதல் நடைபெற்ற இடங்களில் ஒன்றான பாலகோட், தனியாகமலைகள் சூழ்ந்து இருக்கும் காட்டு பகுதி ஆகும். இங்கு ஜெய்ஷ் இ முகமதுவின் சாம்ராஜ்யத்தை மிக தனியாக தனது ஆளுமையில் அனைத்தையும் நடத்தி உள்ளார்

முன்னதாக, 1999ல் நேபாளில் இருந்துடெல்லி வந்த போது கடத்தப்பட்டIndian Airlines Flight 814 விமானம் விடுவிக்க, அப்போதைய இந்திய அரசு,சிறையில் இருந்த மசூத் அசாரை விடுதலை செய்து விமானத்தை மீட்டது. இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் யூசுப் அசாரும் ஒருவர்என்பது என்பது முக்கிய தகவல்

மிக முக்கிய புள்ளி அதேபோல்புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்களை பலி வாங்கிய தாக்குதலுக்கும் இவர் முக்கிய மூளையாக செயல்பட்டு இருக்கிறார் என்கிறார்கள். இந்த நிலையில் யூசுப்அசார் கொலை செய்யப்பட்டது மிகமுக்கியமான ராணுவ நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்