இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்ததால் குழந்தையை துடிதுடிக்க கொலை செய்தேன்: தாய் அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

வேலூர் மாவட்டத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்கு தடையாக இருந்த காரணத்தால் தனது ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்ததாக தாய் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாஸ்கரன் - நளினி தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர்.

பாஸ்கரன் வெளியூரில் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நளினிக்கு, முரளி என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. இந்த விவகாரம் தெரிந்து பாஸ்கரன் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால் தனது இரண்டு மகன்களையும் கணவருடன் விட்டு, ஒன்றரை வயது பெண் குழந்தையை மட்டும் அழைத்துக்கொண்டு காதலன் முரளியுடன் சென்றுவிட்டார்.

இந்நிலையில் தனது மகள் ரித்விகா மயங்கிவிட்டதாக திடீரென மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார், அங்கு குழந்தையை சோதித்து பார்த்ததில் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர், மேலும் குழந்தையின் உடலில் இருக்கும் காயங்களை பார்த்து சந்தேகம் அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து, நளினியிடம் பொலிசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அதில் நளினி அளித்துள்ள வாக்குமூலத்தில், முரளியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தேன், எனது கணவரிடம் இருந்து விவாகரத்து கிடைக்கவில்லை, இதற்கு எனது குழந்தை தடையாக இருந்தது.

குழந்தையை கொன்றுவிட்டால் நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழலாம் என முரளி கூறினார். இதனைத்தொடர்ந்து நாங்கள் இருவரும் சேர்ந்து குழந்தையை அடித்துக்கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers