நான் இறந்துவிட்டால் என் முகத்தை அவள் பார்க்கவேண்டும்....தாலி கட்டிய பிறகு ஏமாற்றிய மனைவி: விஷம் குடித்து வாலிபர் வெளியிட்ட வீடியோ!

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

நாகர்கோவில் மாவட்டத்தில் திருமணம் செய்து ஏமாற்றியதால் மனம் உடைந்த காதலன் விஷம் குடித்து தறகொலைக்கு முயன்றுள்ளார்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சஜினும் , குறித்த மாணவியும் காதலித்து பல்வேறு இடங்களுக்கு சுற்றிதிரிந்துள்ளனர்.

சஜின் கல்லூரியில் படிக்கும்போதே குறித்த மாணவியை அலைபாயுதே பட பாணியில் திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு இருவரும் அவரவர் வீட்டில் இருந்துள்ளனர்.

நேரம் கிடைக்கும்போது அவ்வப்போது சந்தித்துக்கொண்டர். இந்நிலையில், முதல் திருமணநாளை முன்னிட்டு, அன்பு மனைவிக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இதனை மாணவியின் பெற்றோர் பார்த்துவிட்டதையடுத்து, நடந்தவை அனைத்தையும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவியை அவரது பெற்றோர் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.

மாணவியை சந்திக்க முடியாததால், சஜின் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், என் மனைவியை அவருடைய பெற்றோர் வீட்டில் சிறை வைத்துள்ளனர். எனவே அவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது கோர்ட்டில் ஆஜராகி மாணவி கூறியபோது, சஜின் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், எனவே நான் பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் மாணவியை அவருடைய பெற்றோருடன் செல்ல உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் மாணவியின் வீட்டுக்கு சென்று சஜின் பிரச்சனை செய்துள்ளார்.

இதுபற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். அதன்பேரில் சஜின், அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்பட 5 பேர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் பொலிசார் வழக்கு பதிவு செய்ததால் மனவேதனை அடைந்த சஜின் திடீரென விஷம் குடித்தார்.

விஷம் குடிப்பதற்கு முன்பாக அவர் பேஸ்புக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார், அதில்,

நான் மாணவியை பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்தேன். அவரது பெற்றோரின் தூண்டுதலின் பேரில் என் மீது மாணவி புகார் அளித்துள்ளார்

. இதனால் என் தாயை பொலிசார் அழைத்து சென்றுள்ளனர். என் தாயா? அல்லது என் காதலா? என்று பார்த்தால் என் தாய் தான் எனக்கு முக்கியம். நான் இறந்து விட்டால் என் முகத்தை மாணவி பார்க்க வேண்டும் என உருக்கமாக பேசியுள்ளார்.

தற்போது சஜினுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers