மருமகளை உயிரோடு எரித்து கொன்ற மாமனார்.. அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் இளம்பெண்ணை எரித்து கொலை செய்த வழக்கில் ஏற்கனவே கணவர், மாமியார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாமனாரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூரை சேர்ந்தவர் ஸ்மருதி ரஞ்சன். இவர் மனைவி ஜோதிர்மயி.

தம்பதிக்கு பெண் பிள்ளை உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் ஜோதிர்மயிக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ரஞ்சனின் பெற்றோர் மண்ணெண்ணெயை ஜோதிர்மயி மீது ஊற்றி தீவைத்தனர்.

இதில் உடல் கருகிய நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஜோதிர்மயி உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் ஜோதிர்மயி மகளான சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று அவரின் கணவர் மற்றும் மாமியாரை கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று ஜோதிர்மயி மாமனாரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...