திருநங்கையை உயிருக்கு உயிராக காதலித்த இளைஞர்: கோலாகலமாக நடந்த திருமணத்தின் பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் காதலர் தினத்தன்று இளைஞர் ஒருவர் தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் திருநங்கையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலத்தின் இண்டோரை சேர்ந்தவர் ஜுனைத் கான். இவர் கடந்த ஆண்டிலிருந்து ஜெயா சிங் என்ற திருநங்கையை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.

இந்த காதலுக்கு ஜுனைத் கானின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜெயாவின் குடும்பத்தார் ஆதரவளித்தனர்.

இந்நிலையில் குடும்பத்தார் எதிர்ப்பை மீறி ஜெயாவை கரம்பிடிக்க ஜுனைத் கான் முடிவெடுத்தார்.

அதன்படி காதலர் தினமான நேற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்து ஜுனைத் கான் கூறுகையில், என் குடும்பத்தார் திருமணத்தை ஏற்பார்கள் என நினைத்தோம், ஆனால் ஏற்கவில்லை. ஆனாலும் நான் எப்போதும் ஜெயாவுடன் இருப்பேன்.

அவரை நான் காதலிக்கிறேன், எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என கூறியுள்ளார்.

திருநங்கை ஜெயா கூறுகையில், இந்தியாவில் திருநங்கை திருமணம் செய்து கொள்வது சவாலாக உள்ளது. ஜுனைத் கானின் குடும்பத்தார் என்னை ஏற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

என்றாவது ஒருநாள் என் மாமியார், மாமனாருக்கு நிச்சயம் சேவை செய்வேன் என கூறியுள்ளார்

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers