தாக்குதலுக்கு பின்னணியில் நாங்களா? பாகிஸ்தான் பதில்! இந்தியா கொடுத்த பதிலடி

Report Print Raju Raju in தெற்காசியா

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் நாங்கள் இல்லை என பாகிஸ்தான் கை விரித்துள்ளது.

புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 44 ரிசர்வ் பொலிசார் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய நிலையில், அந்த அமைப்பு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வருவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில் தங்களுக்கும் தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை என்று பாகிஸ்தான் கை விரித்துள்ளது.

இதுகுறித்து, அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறையை பாகிஸ்தான் எப்போதும் கண்டித்து வருகிறது.

அது உலகத்தில் எங்கு நடந்தாலும் அதனை கண்டிக்க பாகிஸ்தான் கடமைப்பட்டுள்ளது. நடந்தது என்ன என்பதை விசாரிக்காமல் காஷ்மீர் தாக்குதலையும், எங்களையும் தொடர்பு படுத்தினால் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையில் பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக அந்தஸ்தை இந்தியா அதிரடியாக ரத்து செய்துள்ளது.

இது குறித்து இந்தியாவின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், வர்த்தகத்திற்கு உகந்த நாடு என பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சலுகையை திரும்பப்பெற்றது இந்தியா.

பாகிஸ்தானுக்கு வர்த்தக ரீதியாக எந்த சலுகைகளும் வழங்கப்படமாட்டாது. சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers