பூட்டியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணின் சடலம்: விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புதிதாய் குடியேறிய நபர், கட்டிலுக்கு அடியில் சடலம் ஒன்று மறைவு செய்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் மூன்று மாடிகள் கொண்ட அந்த குடியிருப்பில் ஒன்றை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ராம்வீர் சிங் ராஜ்புத் என்பவர் வாங்கியுள்ளார்.

ஆனால் அந்த குடியிருப்பில் முன்னர் தங்கியிருந்தவர்கள் ராம்வீர் சிங்கிடம் குடியிருப்பை சுத்தம் செய்வதற்காக கால அவகாசம் கேட்டுள்ளனர்.

மட்டுமின்றி தங்களிடம் அந்த குடியிருப்புக்கான சாவி இல்லை எனவும் கூறியுள்ளனர். இருப்பினும் ராம்வீர் சிங் தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பல மாதங்களுக்கு பின்னர் அந்த குடியிருப்பின் போலி சாவி ஒன்றை தயார் செய்து ராம்வீர் சிங்கிடம் அந்த உரிமையாளர்கள் அளித்துள்ளனர்.

இதனையடுத்து ஞாயிறன்று பணியாளர்கள் சிலருடன் குடியிருப்பை சுத்தம் செய்யும் பொருட்டு ராம்வீர் சிங் சென்றுள்ளார்.

அப்போது ஒரு கட்டிலின் அடியில் பெட்டிக்குள் மறைவு செய்திருந்த சடலம் ஒன்றை பணியாளர்கள் கண்டுள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி மேற்கொண்ட விசாரணையில், அந்த சடலம் இதற்கு முன்னால் குடியிருந்த விமலா ஸ்ரீவத்சவா என்பவரது என்பது தெரியவந்தது.

அவருடன் குடியிருந்த அவரது மகன் அமித்(32) என்பவரை தற்போது பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் விமலா கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே உறுதியான தகவல் வெளியாகும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...