தாயை ஆபாசமாக திட்டியதால் அத்தை மகன் வெறிச்செயல்! சிறுவன் கழுத்தை அறுத்து கொலை

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

சேலம் மாவட்டத்தில் தாயை ஆபாசமாக திட்டியதால் கோபமடைந்த கல்லூரி மாணவர், சிறுவனை அறுத்து கொலை செய்துள்ளார்.

ரமேஷ் - விஜயலட்சுமி தம்பதியினரின் மகன் ஆறுமுகம். சற்று மூளை வளர்ச்சி குறைந்தவர் என்பதால் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் ஆறுமுகம் கழுத்து, கை ஆகிய இடங்களில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தவன் சிறிது நேரத்தில் உயிரிழந்தான்.

விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சிறுவன் ஆறுமுகத்தின் தந்தையின் தங்கைக்கு 19 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவர், கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஆறுமுகம், அத்தையையும் அவர் மகனையும் ஆபாச வார்த்தைகளால் திட்டுவதும், அடிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.

இதனால் ஆத்திரம் அடைந்த அத்தை மகன், கீழே கிடந்த செங்கல்லை எடுத்து சிறுவனின் காதில் அடித்துள்ளான். மேலும் கத்தியால் ஆறுமுகத்தின் கழுத்து மற்றும் கை பகுதியை அறுத்துள்ளான் ரத்தம் வெளியேறி, சிறுவன் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தான்.

தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளியை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers