திருமணமான 180 நாட்களில் புதுப்பெண் எடுத்த முடிவு: பின்னணி காரணம் என்ன?

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

சென்னையில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மாமனார் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவடியை சேர்ந்த மாதவிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் முருகன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில், திருணத்திற்கு பிறகு முருகன் தனது மனைவியை சந்தேகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாதவி கடந்த 15-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக, மாமியார் தானியம்மாள், மாமனார்அன்னியப்பன் ஆகியோரை பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள மாதவியின் கணவர் முருகனை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers