தாலி கட்டும் நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட மணமகள்: அதன் பின்ன நடந்த மங்களகர சம்பவம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

டெல்லியில் மணமேடையில் வைத்து மணப்பெண்ணை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் மணமகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருத்துவமனையிலேயே திருமணம் செய்துகொண்டார்.

Shakarpur என்ற பகுதியில் நடைபெற்ற திருமணத்தில், மணமகளின் நண்பன் என்றும் அவளை பார்க்க வேண்டும் என கூறிக்கொண்ட வந்த மர்மநபர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென துப்பாக்கியை எடுத்த மணமகளை சுட்டுள்ளார்.

இதில், காலில் காயமடைந்த மணமகள் கீழே விழுந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, வலியை பொறுத்துக்கொண்டு மிகவும் தைரியமாக மருத்துவமனையில் வைத்தே தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனை திருமணம் செய்துகொண்டார்.

மர்மநபர் யார் என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு முன்னர் குறித்த நபர், அப்பெண்ணிடம் தனது காதலை தெரியப்படுத்தியதாவும், இதனை அப்பெண் மறுத்துவிட்டதால் இப்படி துப்பாக்கியால் சுட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers