காமுகனால் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவன்: பத்து மாதங்கள் கழித்து பழிதீர்த்த தாயார்

Report Print Arbin Arbin in தெற்காசியா

தமிழகத்தின் திருவண்ணாமலை பகுதியில் கூலிப்படையினரால் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர் தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த நாகராஜன் என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவருடன் நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவின் 9 வயது மகனைக் கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவானார் நாகராஜ்.

கள்ளத்தொடர்புக்கு இடைஞ்சலாக இருந்ததால் மஞ்சுளாவுக்கு தெரியாமலே 9 வயது சிறுவனை இரும்பு கம்பியால் அடித்து நாகராஜ் கொலை செய்தார்.

இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர். தனது மகனைக் கொலை செய்த நாகராஜனை பழிவாங்கும் எண்ணத்தில் மஞ்சுளாவும் இருந்துள்ளார்.

இதனிடையே ஜாமீனில் வெளியே வந்த நாகராஜை கொலை செய்யும் நோக்கில் கள்ள துப்பாக்கியை வாங்க முயன்றுள்ளார் மஞ்சுளா.

ஆனால் அந்த முயற்சியை முறியடித்த பொலிசார் அவரைக் கைது செய்தனர். தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதை உணர்ந்த நாகராஜ் திருவண்ணாமலை சென்று தலைமறைவானார்.

தன்னால் நாகராஜை கொலை செய்ய முடியாததை அறிந்த மஞ்சுளா கூலிப்படையை அணுகினார். அதன்படி திருவண்ணாமலையில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவரை, தேடிச் சென்ற கூலிப்படையினர் நேற்று அவரைக் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.

இந்த கொடூர கொலை தொடர்பாக மஞ்சுளாவிற்கு துணையாக நின்ற கூலிப்படையினர் யார் என்பதைத் தனிப்படை அமைத்து பொலிசார் தேடிவருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்