23 வயது காதலன்... ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள்: கர்ப்பத்தை கலைக்க போட்ட திட்டம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

மும்பையில் முதல் காதலியிடம் இருந்து 6 லட்சம் பணத்தினை வாங்கி இரண்டாவது காதலியின் கருவை கலைக்க கொடுத்த 23 வயது காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

23 வயதான அஸ்வின் பாண்டே என்ற வாலிபர், ஏற்கனவே விவாகரத்தான பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் ஆன்லைன் மூலம் 30 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணிடம் தன்னை., விமான நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டார்.

இப்படியே தொடர்ந்த இவர்கள் பழக்கத்தில், நாளடைவில் அப்பெண் தனது பிரச்சனைகளை இந்த நபரிடம் தெரிவித்துள்ளார். இவரும் ஆறுதல் கூறுவது போல நெருங்கி பழகி அப்பெண்ணை கர்ப்பமாக்கியுள்ளார்.

இதற்கிடையில் முதல் காதலியிடம் தனக்கு பணத்தேவை இருப்பதாக பொய்யான சில காரணங்களை கூறி சுமார் 6 லட்சம் பணத்தினை வாங்கியுள்ளார். அந்த பணத்தில் 60 ஆயிரம் ரூபாயை இரண்டாவது காதலியிடம் கொடுத்து உனது கர்ப்பத்தை கலைத்துவிடு என கொடுத்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை அறிந்துகொண்ட இரண்டாவது காதலி பொலிசில் புகார் அளித்ததையடுத்து, இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் அஸ்வின் நடத்திய காதல் நாடகம் அம்பலமாகியுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அஸ்வின் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்