ஒரே ஆண்டில் இருமுறை கர்ப்பமான பிரித்தானிய தாயார்: வெளியான சுவாரஸ்ய தகவல்

Report Print Arbin Arbin in தெற்காசியா

பிரித்தானிய தாயார் ஒருவர் ஜனவரி முதல் திகதியும், அதே ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்றும் இரு பிள்ளைகளை பிரசவித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவின் கும்ப்ரியா பகுதியில் குடியிருக்கும் 26 வயதான லாரா அட்சிசன் என்பவரே ஒரே ஆண்டில் இருமுறை பிரசவித்துள்ளார்.

லாரா அட்சிசன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் திகதி தமது மகன் கார்லோஸை பெற்றெடுத்தார்.

அதே ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி தமது இரண்டாவது மகன் நிக்கோலஸை பெற்றெடுத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையானது எப்போதுமே தமக்கு விசேடமானது என கூறும் லாரா, ஆனால் ஒரு கிறிஸ்துமஸ் தினத்தில் பிள்ளை பெற்றெடுப்பேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை என்றார்.

மட்டுமின்றி எந்த திட்டமும் இன்றியே கிறிஸ்துமஸ் நாளில் பிள்ளை பெற்றெடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லாரா மற்றும் லூயிஸ் ஆகிய இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து இருவரும் குழந்தைக்காக முயற்சி செய்து வந்துள்ளனர்.

இதனிடையே இருமுறை கருச்சிதைவும் ஏற்பட்டுள்ளது. அதில் ஒன்று இரட்டையர்கள் எனவும் தெரியவந்தது.

மூன்றாவது முறையாக கருவுற்றபோது அந்த குழந்தை தங்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தோம் என கூறும் லாரா,

ஆனால் எந்த வித இடையூறும் இன்றி சுமூகமாக பிரசவ காலம் இருந்தது எனவும், பின்னர் ஜனவரி 5 ஆம் திகதி மருத்துவர்கள் பிரசவத்திற்கு நாள் குறித்துள்ளனர் என்றார்.

இருப்பினும் ஜனவரி ஒன்றாம் திகதியிலேயே தாம் பிள்ளை பெற்றெடுத்ததாகவும் கூறியுள்ளார் லாரா.

இந்த நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் லாராவுக்கு உடல் எடை அதிகரிப்பதாக அறிந்தார். மட்டுமின்றி அதீத பசியும் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து கர்ப்பிணிக்கு உரிய சோதனை மேற்கொண்டதில் அதிர்ந்து போயுள்ளனர் லாரா தம்பதிகள்.

மீண்டும் கருவுற்றிருப்பதை அறிந்த லாரா, ஆறு மாதம் வரை தாம் கருவுற்றிருப்பதையே அறியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அதே ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி தமது இரண்டாவது மகனை லாரா பெற்றெடுத்துள்ளார்.

தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ள லாரா எதிர்வரும் 27 திகதி மூன்றாவது பிள்ளையை பெற்றெடுக்க உள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers