நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு தடை

Report Print Kavitha in தெற்காசியா

நேபாளத்தில் வெகுநாட்களாக புழக்கத்தில் இருந்த இந்தியாவின் ரூ.200, ரூ.500, மற்றும் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

காத்மாண்டுவில் வியாழக்கிழமை கூடிய அமைச்சரவையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தபோது, நேபாள வங்கிகள் அந்நாட்டில் இருந்த ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை இந்தியாவிடம் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொண்டன.

இந்நிலையில் இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ.200, ரூ.500, மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு நேபாளத்திலும் இந்த புதிய ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகப்படுத்திய ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை மட்டும் தற்போது நேபாளத்திற்குள் செல்லாது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்திய அரசின் 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் புழக்கத்துக்கு பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினால் இந்தியாவிலிருந்து நேபாளம் செல்லும் சுற்றுலா பயணிகளும், இந்தியா - நேபாள் இடையே வர்த்தகம் செய்யும் வியாபாரிகளும், அங்கு வந்து பணிப்புரியும் நேபாள நாட்டு பணியாளர்களும் பெரும் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers