தலைக்கேறிய போதை மருந்து... உறவுக்கு அழைத்த இளைஞர்: மறுத்ததால் நடந்த கொடூரம்

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் பாலியல் உறவுக்கு மறுப்பு தெரிவித்த இளைஞரை 19 வயது இளைஞர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலத்தின் மும்பை நகரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குறித்த சம்பவத்தில் தொடர்புடைய 19 வயதான நூர் முகம்மத் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை நகரில் உள்ள மலாடு பகுதியில் கடந்த வெள்ளியன்று இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. நண்பர்களான நூர் முகம்மது மற்றும் அஸ்லம் முகம்மது ஆகிய இருவரும் ஒன்றாக போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் கொண்டுள்ளனர்.

சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக அமர்ந்து போதை மருந்து பயன்படுத்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும் நூர் முகம்மது தமது நண்பரை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அஸ்லாமுடன் வாக்குவாதத்திலும் ஏற்பட்டுள்ளார் நூர் முகம்மது. ஒருகட்டத்தில் அஸ்லாமின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் நூர் முகம்மது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் நூர் முகம்மதை கைது செய்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்