காதலனுக்காக கணவரை கொலை செய்த மனைவி: 6 ஆண்டுகளுக்கு பின்னர் அம்பலமான உண்மை

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் காதலனின் நிதி நெருக்கடியை தீர்த்து வைக்க சொத்துக்காக கணவரை மனைவியே கொன்று சடலத்தை மறைவு செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கேரளாவின் காசர்கோடு பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆற்றில் மிதந்த உருத்தெரியாத சடலமானது மனைவியால் கொல்லப்பட்ட முகம்மது என்பவரது என பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முகம்மது என்பவரை அவரது மனைவி சக்கீனா கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் குடியிருப்புக்கு அருகே உள்ள ஆற்றில் சடலத்தை மறைவு செய்துள்ளார்.

அப்பகுதில் குடியிருக்கும் உம்மர் என்பருடன் ஏற்பட்ட காதலால், அவரது நிதி நெருக்கடியை சமாளிக்க உம்மர் மற்றும் சக்கீனா ஆகிய இருவரும் சேர்ந்து முகம்மதை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

கொலைக்கு பின்னர் முகம்மதுவின் பெயரில் உள்ள சொத்துக்களை விற்று உம்மரின் கடன்களை அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் சக்கீனா தமது கணவரை காணவில்லை என அளித்துள்ள புகார் மனுவிலும், விசாரணையின்போது அவர் தெரிவித்திருந்த தகவலிலும் இருந்த முரண்பாடு பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டுமின்றி 2012 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட உருத்தெரியாத சடலத்தின் மீதான விசாரணையில், அந்த சடலம் முகம்மது என்பவரது என்பதும் பொலிசாருக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் சம்பம் நடந்து ஆறரை ஆண்டுகளுக்கு பின்னர் முக்கிய குற்றவாளி என கருதப்படும் சக்கீனாவை கைது செய்துள்ள பொலிசார்,

குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்