நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: திக்திக் நிமிடங்கள்! 350 பயணிகளின் நிலை என்ன?

Report Print Raju Raju in தெற்காசியா

நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் நூலிழையில் பெரும் விபத்தில் இருந்து தப்பித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொல்கத்தாவில் இருந்து டார்ஜலிங்கில் உள்ள பக்தோக்ரா விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் கடந்த திங்கட்கிழமை பறந்து கொண்டிருந்தது.

விமானமானது 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது.

அப்போது பக்தோக்ரா விமான நிலையத்திலிருந்து கொல்கத்தாவுக்கு ஏர் ஏசியா விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானமும் அதே உயரத்தில் பறந்தது.

இரு விமானங்களும் ஒரே பாதையில் எதிர் எதிரில் வந்து கொண்டிருந்த நிலையில் இதனால் விபத்து ஏற்பட இருப்பதை உணர்த்தும் எச்சரிக்கை கருவி இரு விமானங்களிலும் ஒலித்தது.

இதையடுத்து உஷாரான விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக விமானத்தை மாற்று பாதையில் இயக்கினர்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 350 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் விமானிக்கும் விமானக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குமான உரையாடல் பதிவை ஆராயவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...