உறவுக்கு மறுத்தார்! மொடல் அழகியை கொன்ற இளைஞனின் திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

மும்பையில் 20 வயது மொடல் அழகியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு 19 வயது கல்லூரி மாணவர், அதற்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

மான்சி தீக்ஷித் என்பவர் மொடல் ஆகும் ஆசையில் மும்பையில் வசித்து வந்துள்ளார்.

இவருக்கு மும்பையில் பி.காம் படித்துக்கொண்டிருக்கும் முஸாமில் சையத் (19) என்பவர் தொடர்பு, கிடைத்தது.

இருவரும் சமூகவலைதளத்தில் அறிமுகமாகினர். இந்நிலையில் அந்தேரியில் உள்ள தனது வீட்டுக்கு மான்சியை அழைத்துள்ளார் சையத்.

வீட்டுக்கு வந்த மான்சியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை கொலை செய்து பிணத்தை சூட்கேஸில் அடைத்து எடுத்து சென்று ஒதுக்குப்புறமான இடத்தில் வீசியுள்ளார் சையத்.

இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சையத், பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், வீட்டுக்கு மான்சியை அழைத்தேன். வீட்டில் யாரும் இல்லை என்பதால் தகாத உறவில் ஈடுபட அவரை அழைத்தேன்.

அவர் மறுத்ததையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அருகில் இருந்த ஸ்டூலை எடுத்து தாக்கினேன். இதில் அவர் மயக்கமானார்.

சிறிது நேரத்தில் அம்மா வந்து கேட்டால் என்ன சொல்வது என்று பயம் ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து கயிறால் கழுத்தை இறுக்கிக் கொன்றேன் என்று கூறியுள்ளார்.

இந்த கொலையை சையத் தான் செய்தார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவர் மீது கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்