இறப்பு கண்களில் தெரியுது! அவன் ஆன்மா என்னை அழைக்கிறது.. தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பகீர் கடிதம்

Report Print Raju Raju in தெற்காசியா
251Shares

இந்தியாவில் இரண்டு சாலை விபத்துக்களை பார்த்த அதிர்ச்சியில் இருந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சவுரவ் நாக்பூர்கர் (19). கல்லூரி மாணவரான இவர் கடந்த ஞாயிறு அன்று தனது சகோதரியின் தாவணியை கழுத்தில் மாட்டி கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

சவுரவின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினார்கள்.

அதில், அவனின் ஆன்மா என்னை அழைக்கிறது என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் கடந்த மாதம் சவுரவ் ஒரு சிறுவன் மற்றும் பெண் சாலை விபத்தில் இறந்ததை பார்த்துள்ளார்.

அதிலிருந்தே அதிர்ச்சியில் உறைந்திருந்த சவுரவ் அந்த விபத்தில் நடந்த காட்சி மற்றும் சத்தம் குறித்தே குடும்பத்தரிடம் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் தான், விபத்தில் இறந்த சிறுவனின் ஆன்மா தன்னை அழைப்பதாக கூறி அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்