கேரள மழை வெள்ள பாதிப்பு: விழாக்கால தங்கம் விற்பனை வீழ்ச்சியடையுமா?

Report Print Balamanuvelan in தெற்காசியா

திருமணத்திற்காக 200 கிராம் முதல் 1 கிலோ தங்கம் வரை வாங்குபவர்கள் கேரள நாட்டவர்கள், ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் தங்கம் விற்பனையை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370-ஐத் தொட்டுள்ள நிலையில் சுமார் 1 மில்லியன் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் சுற்றுலா மற்றும் ரப்பர் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காபி தயாரிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

நபரொன்றிற்கு ஒரு மாதத்திற்கு தங்கம் வாங்குவதற்காக இந்தியாவிலேயே அதிகம் செலவழிப்பது கேரள நாட்டவர்கள்தான்.

அவர்கள் ஒரு நபருக்கு 5.70 டொலர்கள் செலவிடுகிறார்கள். கேரளாவில் ஆகஸ்டு மாத இறுதி முதல் டிசம்பர் வரை விழா மற்றும் திருமண சீஸன்தான்.

நகை தயாரிக்கும் தொழிற்சாலைகள் பல மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், பணியாளர்கள் தொழிற்சாலைக்கு போக இயலாததாலும், மாநிலத்தின் நகை உற்பத்தியில் 60 முதல் 70 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதுதான் வெள்ளம் வடியத் தொடங்கியிருப்பதாலும், மறுசீரமைப்புப் பணிகள் இப்போதுதான் ஆரம்பித்திருப்பதாலும் எந்த அளவு பாதிப்பு ஏற்படும் என்பதை இப்போதைக்கு கணிப்பது கடினம்தான் என்கிறார் பிரபல நகை நிறுவன உரிமையாளர் ஒருவர்.

பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளை மீண்டும் கட்டி எழுப்புவதில்தான் கவனம் செலுத்துவார்களே தவிர நகை வாங்குவது குறைவாகத்தான் இருக்கும் என்று கூறும் அவர் தங்கள் வாழ்க்கை சகஜ நிலைக்கு வந்த பின்தான் மக்களின் நோக்கங்களும் மாறும் என்கிறார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்