பொதுவெளியில் காதல் ஜோடி செய்த செயல்: கைது செய்த பொலிசார்

Report Print Arbin Arbin in தெற்காசியா

பாகிஸ்தானில் காருக்குள் முத்தமிட்டபடி அமர்ந்திருந்த காதல் ஜோடியை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

பொதுவெளியில் ஆபாசமாக நடந்து கொண்ட குற்றத்திற்காக இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் காதலர் இருவர் ஆபாசமாக நடந்து கொள்வதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார் குறித்த காதல் ஜோடியை கையும் களவுமாக பிடிகூடியுள்ளனர்.

பின்னர் இருவரையும் கராச்சியில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் அழைத்து சென்று அவர்கள் மீது வழக்குப் பதிந்து பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.

பொதுவாக வார இறுதி நாட்களில் இதுபோன்ற வணிக வளாகங்கள் மற்றும் பூங்காக்களில் செல்லும் இளம் ஜோடிகளை பொலிசார் துன்புறுத்துவதும், எச்சரித்து அனுப்புவதும் வாடிக்கையாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...