கடலில் முக்குளித்து கடற்பாசி சேகரிக்கும் தமிழச்சிகள்

Report Print Kavitha in தெற்காசியா

கடலுக்கு அடியிலும், இறந்த பவளப்பாறைகளிலும் வளர்ந்துள்ள கடற்பாசிகளை சேகரிக்க தமிழ் நாட்டின் இராமேஸ்வரத்தில் மூவாயிரம் பெண்கள் கடலில் முக்குளிக்கின்றனர்.

கடல் கொந்தளிப்புகள் உள்ளிட்ட பல சவால்களை இந்தப் பெண்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து கடலில் முத்துக்குளிக்கும் பாட்டி ஒரு அவர் எதிர் கொள்ளும் சவால்களை பற்றி விளக்கி கூறுகின்றார்.

“கடல் தான் எங்கள் உயிர் எங்கள் வாழ்வாதாரம், முன்பு அதிக கடற்பாசிகள் இருந்த வேளையில் எங்களால் சேரிக்க முடிந்தது மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் தற்போது தேவைக்கேற்ப தான் கிடைக்கின்றது.

மேலும் ஒரு நாளுக்கு 50 கிலோ வரை சேகரிக்கப்படலாம், வலிமை குறைந்தவராக இருப்பின் 15 கிலோ வரை சேகரிக்க முடிகின்றது” என்று கூறியுள்ளார்.

பேரழிவை ஏற்படுத்திய 2004 ஆம் சுனாமியில் சிக்குண்ட தருணத்தை அவர் நினைவு கூர்கிறார்.

“அன்று மூன்று கேணி நிறைய கடற்பசையியை சேகரித்திருந்தேன் எனது கை மணிக்கட்டில் அதனை கட்டிருந்தேன். கடல் அலை மிகவும் மோசமாக இருந்தது. அலைகளோடு போராடியதும் எங்களுக்கு உதவவில்லை.

எனது மகன்களை காப்பாற்ற கடுமையாக முயற்சித்து கொண்டிருந்தேன். பின்னர் நானும் எனது நான்கு மகள்களும் மீனவர் குழுவால் மீட்கப்பட்டோம், எனக்கு சக்தி இருக்கும்வரை நான் கடலில் வேலை செய்வேன் ” என்கிறார் சோகத்துடன்.

மேலும் இவரை வீரமிக்க பாட்டி என்று அழைத்துவருகின்றனர்.

இந்நிலையில் ஒரு மாதம் 15 நாட்கள் உழைக்கும் கடற்பாசி சேகரிப்பவர்கள் 15 முதல் 140 டொலர் வரை சம்பாதிக்கிறார்கள்.

இது கடற்படுகையிலுள்ள வளங்களை அழித்து இயற்கை அமைப்பை பாதிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

- BBC - Tamil

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்