உள்ளங்கை அளவு குழந்தை செர்ரி: இப்போது எப்படி இருக்கிறார்?

Report Print Fathima Fathima in தெற்காசியா

தெற்கு ஆசியாவின் மிகச்சிறிய அதிசய குழந்தை எனப் போற்றப்பட்ட செர்ரி 128 நாட்களுக்கு சிகிச்சை பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

சட்டீஸ்கரை சேர்ந்த தம்பதி சௌரவ்- நிதிகா, நிதிகாவுக்கு ஏற்கனவே 4 முறை கருக்கலைப்பு ஆன நிலையில் ஐந்தாவதாக கருவுற்றார்.

இந்த குழந்தையாவது நல்ல படியாக பிறக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்த தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம் 25 வார கருவாக இருந்த போது நிதிகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, ஹைதராபாத்தின் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

வெறும் 375 கிராம் மட்டுமே இருந்ததுடன், 20 செ.மீ வளர்ச்சி இருந்தது.

இவ்வளவு எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் உயிர் பிழைப்பது அதிசயம் என்பதுடன், தெற்காசியாவின் மிகச் சிறிய குழந்தை எனும் பெயர் பெற்றது.

குழந்தைக்கு செர்ரி என பெயர் சூட்டி மகிழ்ந்தனர், பிறந்த போதே மஞ்சள் காமாலை, பால் குடிப்பதில் சிக்கல், நுரையீரல் போதிய வளர்ச்சி அடையாதது என பல பிரச்சனைகள் இருந்தது.

இருப்பினும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பால் சுமார் 105 நாட்கள் வென்டிலேட்டரில் வைத்து குழந்தையை பாதுகாத்தனர்.

தற்போது உடல்நலம் தேறிய நிலையில், செர்ரி 1.980 கிலோகிராம் எடையுடன் இருக்கிறார், எந்த கருவியின் உதவி இல்லாமல் அவளால் சுவாசிக்க முடியும்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்