திருமண வீடு....மரண வீடாக மாறிய சோக சம்பவம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் திருமண விருந்தில் உணவுத்தட்டுகள் இல்லாததால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண விருந்தில் கலந்துகொண்டவர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு உணவுத்தட்டுகள் இல்லாமல் போனதால் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இந்த வாய்த்தகராறு சண்டையாக மாறியதில், விஷால் எனும் இளைஞர் பலியானார். மேலும் 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவுத்தட்டுக்காக ஏற்பட்ட சண்டையில் திருமண வீடு, மரண வீடாக மாறியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers