உலகையே அதிர வைத்த அகதிப் பெண்! இப்போது எப்படியிருக்கிறார் தெரியுமா?

Report Print Gokulan Gokulan in தெற்காசியா
1016Shares
1016Shares
ibctamil.com

30 ஆண்டுகள் கழித்து சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ள அகதிக்கு ஆப்கான் அரசு வீடு வழங்கியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் நடந்த சோவியத் படையெடுப்பின் போது அந்நாட்டை விட்டு பலர் வெளியேறினர்.

அப்போது தன் உடன்பிறப்புகள் மற்றும் பாட்டியுடன் இணைந்து நடைபயணமாக பாகிஸ்தான் நாட்டிற்கு வந்து அகதியாக குடியேறியவர், சர்பட் குலா.

1985-ஆம் ஆண்டு வெளிவந்த National Geoagraphic இதழின் அட்டை படத்தில் இவரின் புகைப்படம் வெளியிடப்பட்டபோது தன் பச்சை நிற கண்களால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவருக்கு அப்போது வயது 12.

அதன்பின் பாகிஸ்தானில் வாழ்ந்து வந்த இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்தாண்டு போலி அடையாள அட்டை வைத்திருந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்ட இப்பெண்ணுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.

அதனை எதிர்த்து வாதாடிய குறித்த பெண், தனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர், அவர்களை கவனித்துகொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் Hepatitis C என்னும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

குறித்த பெண்ணின் கணவர் கடந்த மாதம் இதே நோயால் இறந்துள்ளதால், அவரின் உடல்நிலையையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு அவரின் சொந்த நாடான ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து தாய் நாடான ஆப்கானுக்கு சென்றுள்ள குறித்த பெண்ணுக்கு அரசு சார்பாக 3000 சதுர அடி பரப்பளவில் சொந்தமாக வீடு மற்றும் மாதம் 700 டொலர் நிதியுதவி வழங்குவதாக அமைச்சரவை செய்தி தொடர்பாளர் Najeeb Nangyal தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 370,000 பதிவு செய்யப்பட்ட அகதிகளை பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்