வினோதமான நோயால் அவதியுற்ற நபர்: உலக சாதனை படைத்த மருத்துவர்கள்

Report Print Peterson Peterson in தெற்காசியா

பங்களாதேஷ் நாட்டில் வினோதமான நோயால் அவதியுற்று வந்த நபருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து அந்நோயை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ் நாட்டில் உள்ள Khulna மாகாணத்தில் Abul Bajandar என்ற ரிக்ஷா ஓட்டுனர் வசித்து வருகிறார்.

சிறிய வயதில் ஆரோக்கியமாக வளர்ந்து வந்த அவர் காதல் வயப்பட்டு ஒரு பெண்ணையும் திருமணம் செய்துக்கொண்டார்.

ஆனால், நாட்கள் செல்ல அவரது உடலில் வினோதமான மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது.

உடலின் பல பகுதிகளில் எண்ணற்ற மருக்கள்(warts) வளரத் தொடங்கின. கைகள் இரண்டிலும் மருக்கள் நீளமாக வளர்ந்து சென்றதால் அவரால் அன்றாட வேலைகளை செய்ய முடியவில்லை.

இதனால் வேலை பறிப்போனது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நபரின் நோய் தொடர்பான தகவல் உலகம் முழுவதும் பரவியதை தொடர்ந்து, அவரை ‘மரம் மனிதர்(tree man) என அனைவரும் அழைக்க தொடங்கினர்.

இந்நிலையில், இவருடைய நோய் தொடர்பாக தகவல் அறிந்த Dhaka Medical College மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க முன் வந்தனர்.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அவர் ஒரு வருடக் காலமாக தங்கி வந்துள்ளார். இக்காலத்தில் அவருக்கு வெவ்வேறு விதமான 16 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.

இச்சிகிச்சைகளுக்கு பிறகு தற்போது அவரது உடலில் வளர்ந்து வந்த 90 சதவிகித மருக்கள் மறைந்துள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் பேசியபோது, ‘இனிவரும் காலத்தில் மருக்கள் மீண்டும் வளராமல் இருந்தால், உலகளவில் இந்நோயால் முதன் முதலில் குணமானவர் என்ற பெயரும் இவருக்கு கிடைக்கும்’ எனத் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சைக்கு பின்னர் அப்துல் பேசியபோது, ‘இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உள்ளேன். இப்போது தான் முதன் முதலாக எனது மகளை கட்டி அணைத்து கொஞ்ச முடிகிறது.

மருத்துவர்களின் இந்த உதவியை எப்போதும் மறக்க மாட்டேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments