சுமத்ரா தீவில் பாரிய நிலநடுக்கம்- 25 பேர் பலி! சுனாமி அபாயம்?

Report Print Fathima Fathima in தெற்காசியா

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் அச்சே பகுதியை இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாக பதிவான இந்நிலநடுக்கத்தால் பல வீடுகள் தரைமட்டமாகின.

இந்த விபத்தில் இதுவரையில் 25 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது, உயிருக்கு ஆபத்தான நிலையில் பலரும் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சுனாமி ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments