இந்தியா- பாகிஸ்தான் காதல் கைகூடுமா?

Report Print Raju Raju in தெற்காசியா

பாகிஸ்தானில் வாழும் தன் காதலியை மணக்க இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனக்கு உதவி செய்ய வேண்டும் என இளைஞர் ஒருவர் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் நரேஷ் தேவயானி, இவர் பிரியா என்னும் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இதில் முக்கியமான விடயமே நரேஷ் காதலிக்கும் அந்த பெண் பிரியா பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பது தான்.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் வசித்து வரும் பிரியாவுக்கும் நரேஷ் தேவயானிக்கும் இந்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் தாக்குதல் பிரச்சனையால் இந்திய தூதுரகம் பல சங்கடங்களை சந்தித்து வருகிறது. இதனால் பிரியா குடும்பத்தாருக்கு இந்தியா வருவதற்கு விசா தாமதமாகி வருகிறது.

இந்த விடயத்தை டிவிட்டரில் குறிப்பிட்டு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜிடம் நரேஷ் உதவி கேட்க, அதற்கு பதிலளித்த சுஷ்மா, கவலைபடாதீர்கள் ; நாங்கள் நிச்சயம் விசா வழங்குவோம் என அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments