அடக்கருமமே! இந்த வீடியோவை பார்க்காதீங்க மக்களே

Report Print Santhan in தெற்காசியா

டெல்லியில் வியாபாரி ஒருவர் காய்கறிகளை கழிவு நீரில் கழுவுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் முக்கிய பிரதான சாலையில் வாகனத்தில் வந்த வியாபாரி ஒருவர், வாகனத்தை நிறுத்திவிட்டு தான் கொண்டு வந்த முள்ளங்கியை, அங்கு தேங்கியுள்ள கழிவு நீரில் சுத்தம் செய்கிறார்.

அருகில் வாகனங்கள், பொதுமக்கள் என பலர் செல்ல எந்த ஒரு அச்சமும் இன்றி பொறுமையாக கழுவி, அதே கழிவு நீரில் வைக்கிறார்.

தற்போது டெல்லியில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், வியாபாரியின் இந்த செயல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments