பாகிஸ்தானின் அணு ஆயுத முயற்சி- பிண்ணனி என்ன?

Report Print Abhimanyu in தெற்காசியா

தற்போது காணப்படும் சூழ்நிலையில் உலக நாடுகள் தமது அணு ஆயுத பலத்தை பெருக்கிடும் வகையில் செயற்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.

இதில் பாகிஸ்தான் ஏக்கர் அளவிலான நிலப்பகுதியில் அணு ஆயுதம் தயாரிக்கும் மையத்தை உருவாக்க திட்டமிட்டு அது தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் சமீபத்தில் எடுக்கப்பட்ட சாட்டிலைட் படம் மூலம் தெரிய வந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தொடர்பாக செயற்பட்டுவரும் பிரபல ஜேன்ஸ் நிறுவனம் கடந்த 2015 மற்றும் 2016 ஏப்ரல் மாதம் எடுத்துள்ள புகைப்பட ஆவணங்கள் மூலம் இதனை தெரிவிக்கின்றது.

மேலும் இஸ்லாமாபாத் பகுதியில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் கத்துவா என்ற பகுதியில் இந்த அணு மையம் அமைக்கபடவுள்ளதுடன், இந்த மையத்தை கட்ட 1.2 எக்டேர் நிலம் ஒதுக்கபட்டு இதற்கான பணிகள் ஐரோப்பாவில் உள்ள பிரபல யுரேன்கோ என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1998 ல் முதல் அணுஆயுத சோதனை நடத்தப்பட்ட நிலையில், இஸ்ரேல் மற்றும் இந்தியாவை விட அதிகமான அணுஆயுதங்கள் பாகிஸ்தானில் காணபடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அணு ஆயுதத்தை கட்டுப்படுத்த பல உலக நாடுகள் சிரமப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தானின் அணு ஆயுத முயற்சி பிற நாடுகளின் கவனத்தை ஈர்க்க துவங்கியுள்ளதோடு “என்எஸ்ஜி” என்ற அணுஆயுத குழுவில் பாகிஸ்தான் இடம் பெறுவதற்காகவே இக்கடும் முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments