பயணிகள் பேருந்து- பெட்ரோல் டேங்கர் லொறி மோதல்: 36 பேர் பலி….25 பேர் படுகாயம்

Report Print Peterson Peterson in தெற்காசியா

ஆப்கானிஸ்தான் நாட்டில் எரிபொருள் நிரப்பிய டேங்கர் லொறி ஒன்று பயணிகள் பேருந்து மீது மோதிய விபத்தில் சிக்கி 36 பேர் பலியாகியுள்ளதாகவும், 25 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் உள்ள Zabul மாகாணத்தில் தான் இந்த கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது.

இன்று அதிகாலை நேரத்தில் சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணிகள் பேருந்து ஒன்று Kandahar நகரில் இருந்து புறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரை நோக்கி அந்த பேருந்து சென்றுக்கொண்டு இருந்துள்ளது.

அப்போது அதே சாலையில் சென்ற எரிபொருள் நிரப்பிய டேங்கர் லொறி ஒன்று பேருந்து மீது பயங்கரமாக மோதி வெடித்து சிதறியுள்ளது.

டேங்கர் வெடித்து சிதறியதும் தீ வேகமாக பேருந்து முழுவதும் பரவியுள்ளது. ஓடும் பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டதால் பயணிகள் வெளியேற முடியாமல் பேருந்தில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர்.

தீவிபத்தில் சிக்கிய பேருந்து எரிந்து சாம்பலானதால், இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 30 பயணிகள் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

தீவிபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 25 பயணிகளை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் மோசமான சாலைகளால் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

கடந்த மே மாதம் டேங்கர் லொறி ஒன்று பயணிகள் பேருந்து மீது மோதிய விபத்தில் 73 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments