பாகிஸ்தானில் தொடரும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்: டாக்டர் சுட்டுக்கொலை

Report Print Basu in தெற்காசியா
90Shares

பாகிஸ்தானில் இந்து சமூகத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கராச்சியின் ஹஸ்ரத் மோஹானி பகுதியில் டாக்டர் ப்ரீதம் தாஸ் மருத்துவ மையம் ஒன்றை நடத்திவந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு டாக்டரின் உதவியாளர் செல்போன் ரீசார்ஜ் கார்டு வாங்க கடைக்கு சென்றுள்ளார்.

மருத்துவ மையத்தில் டாக்டர் தனியாக இருந்த நிலையில், மர்ம நபர்கள் டாக்டரை சுட்டுக்கொன்று தப்பிச்சென்றுள்ளனர்.

துப்பாக்கி சத்தம் கேட்டு உதவியாளர் மருத்துவ மையத்திற்கு விரைந்தபோது டாக்டர் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், மருத்துவ மையத்திலிருந்து மர்ம நபர்கள் எந்த மதிப்புமிக்க பொருளையும் கொண்டு செல்லவில்லை என தெரியவந்துள்ளது.

குற்றவாளியை கண்டறிய பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் அப்பாஸ் நகரத்தில் உள்ள மதுக்கடையில் இந்து சமூகத்தை சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments