சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டுக்கொல்ல வேண்டும் என குவாந்தீல் பலூச்சின் தந்தை பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் டஸ்கா நகரத்தை சேர்ந்தவர் குவாந்தீல் பலூச், இவர் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் வீடியோ, ஆபாச புகைப்படங்களுடன் கூடிய புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததின் மூலம் பிரபலமானவர்.
கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், யூலை 14ம் திகதி, பலூச் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார், இது குறித்து விசாரித்த காவல்துறையினர். குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக அவரது அண்ணன் வாசிம், பலூச்சை ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது. தற்போது வாசிம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குவாண்டீலின் தந்தை அன்வர் ஆசிம், சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், அவனை பார்த்தவுடன் சுட்டுக்கொல்லவேண்டும். எங்களுக்கு போதை மருந்தை கொடுத்துவிட்டு, என் கடைக்குட்டி பெண்ணை கொன்றுவிட்டான். அவளை கழுத்தை நெரித்த போது எங்களை கூப்பிட்டு இருப்பாள் எங்களுக்கு கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.