மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

Report Print Thirumal Thirumal in பாதுகாப்பு

மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக பெய்யும் அடை மழையினால் ஒரு சில நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் கனிசமான அளவு உயர்வடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மழை காரணமாக கெனியன், லக்ஷபான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers