நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்! மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

Report Print Sumi in பாதுகாப்பு
318Shares
318Shares
ibctamil.com

எதிர்வரும் 14ஆம் திகதி நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்மாக உள்ளமையினால் போக்குவரத்து ஏற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ளதுடன், ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களின் போக்குவரத்து தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் நயினாதீவு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பிரதேச செயலாளர்கள், கடற்படை, பொலிஸார் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையினர், படகு உரிமையாளர்கள், சுகாதார திணைக்களத்தினர் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்வரும் 14ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை காலை 5 மணியளவில் இருந்து பேருந்துகள் குறிகட்டுவானிற்குப் புறப்படும்.

காலை 6 மணிக்கு குறிகட்டுவானில் இருந்து படகுகள் சேவையில் ஈடுபடும். மாலை 6 மணிமுதல் படகுச் சேவைகள் நயினாதீவில் இருந்தும், இரவு 7.30 மணிமுதல் குறிகட்டுவானில் இருந்து பேருந்துகள் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும்.

படகுகள் சரியான பராமரிப்பிற்கு உட்டுத்துவதற்கான பரிசீலனைகளை துறைமுக அதிகார சபையினர் மேற்கொள்வார்கள்.

துறைமுக அதிகார சபையினர் சிபார்சின் படி எத்தனை பயணிகளை படகுகளில் ஏற்ற முடியும்? படகுகளின் பயன்பாடுகள் தொடர்பிலும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

படகுகளில் பயணிக்கும் பயணிகள் கட்டாயமாக உயிர்காப்பு அங்கிகள் அணிய வேண்டும். அதேவேளை, விசேட திருவிழா நாட்களில் அதிகமான பஸ் சேவைகள் மற்றும் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

எரிபொருள் விலை அதிகரித்துள்ளதனால், படகு கட்டணம் அதிகரிக்குமாறு படகுச் சேவை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விலை நிர்ணய கட்டுப்பாடு சபையுடனான கலந்துரையாடலின் பின்னர், படகுக் கட்டணம் தொடர்பாக அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் பாதுகாப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்